Saturday, August 18, 2018

துயரத்தில் கூப்பிட்டேன் | Thuyarathil koopitaen - Fr. S. J. Berchmans



துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)

எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)

நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)

சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன்
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
(புகழ்ந்து பாடிடுவேன்)




உங்க கிருபை | Unga Kirubai - Benny Joshua


என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே -2


நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே



Friday, February 16, 2018

Visuvasa Kappal Ondru | விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது



விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி

ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்

ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண

ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

Friday, February 9, 2018

கர்த்தனே எம் துணையானீர் | Karthane em thunaiyaaneer



கர்த்தனே எம் துணையானீர்

நித்தமும் எம் நிழலானீர்

கர்த்தனே எம் துணையானீர்


1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
    மனுமக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
    ஜீவனே உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே


Wednesday, February 7, 2018

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் | Muzhu idhayathodu ummai thudhipen

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் – உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2 – என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2

நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் – 2

எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2