Friday, February 16, 2018

Visuvasa Kappal Ondru | விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது



விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி

ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்

ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண

ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

Friday, February 9, 2018

கர்த்தனே எம் துணையானீர் | Karthane em thunaiyaaneer



கர்த்தனே எம் துணையானீர்

நித்தமும் எம் நிழலானீர்

கர்த்தனே எம் துணையானீர்


1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
    மனுமக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
    ஜீவனே உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே


Wednesday, February 7, 2018

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் | Muzhu idhayathodu ummai thudhipen

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் – உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2 – என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2

நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் – 2

எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2