வேலைக்காரன் கண்கள் - தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
Tuesday, August 11, 2020
Vazhthugiren Yesu Nadha | வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே
அற்புதமாய் இரா முழுதும்
அடியேனைக் காத்தீரே
1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும்
2. நித்திரையை இன்பமாக்கி
பத்திரமாய் இருதயத்தை
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர்
3 .பலவிதமாம் சோதனைகள்
எமை சூழச் வந்திருந்தும்
ஒன்றும் எமை அணுகிடாமல்
அன்புடனே பாதுகாத்தீர்
4 சந்தீப்பீரே இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுதும்
ஆவிகுள் யான் பிழைக்க
5 தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புது நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருச் சித்தமதில்
6 பாவமென்றும் அணுகிடாமல்
பரிசுத்தமாம் பாதை செல்ல
தேவையான சர்வாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்
7 படைக்கிறேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கையும் காலுமாக
8. நேசரே உம் திருவருகை
இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்
Subscribe to:
Posts (Atom)