Tuesday, May 27, 2014

குயவனே உம் கையில் | Kuyavane Um Kayil


குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2

என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2

உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே

உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் - உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே

உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே  - ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே


Friday, May 23, 2014

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் | Yesuvae ummai uyarthiduvaen


இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன் -2
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை -2

             உமக்கே ஆராதனை -4

நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என்  கோட்டையே -2
துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே -2

நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே -2
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே -2

நீர் தான் என் பெலனே
நீர் தான் என் சுகமே -2
கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே -2

Thursday, May 22, 2014

எனக்காய் கருதுவார் | Enakai karuthuvar

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல் தம்
சிறகின் நிழழில் மறைப்பார் -2

நம்புவதற்கு என்னக்கென்றும்
சர்வவல்லர் கூடயிருப்பார்
தளராமல் வனாதிரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு -2

பொல்லாபுகள் நேரிடாது
வாதையோ உன்னை அனுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் -2

இரவினலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் -2

சேருவேன் நான் யேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூடயிறுபார்
தீர்காயுசாள் திருப்தியாக்குவார் -2

எனக்காய் கருதுவார் - Enakai karuthuvar - Bro.Issac William