Tuesday, November 8, 2016

சேற்றிலிருந்து தூக்கினார் | Setril Irunthu Thookinar



சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்


    பாவமான வாழ்க்கையை
    மாற்றித் தந்தாரே
    துன்பமான வாழ்க்கையில்
    இன்பம் தந்தாரே


    அவர் எந்தன் கன்மலை - 2
    அவர் எந்தன் கன்மலையானர்.


அன்பின் தெய்வமே என்னை | Anbin deivamae



அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே - நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்


1. பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
    எத்தனையோ நன்மை செய்தீரே
    ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

2. சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
    அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
    இது அதிசயம் அதிசயம் தானே

3. புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
    புதிய வழியில் நடத்துகின்றீரே
    இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே

4. பரம குயவனே உமது கரங்களில்
    என்னையும் கொடுத்து விட்டேனே
    உம் சித்தம் போல என்னை நடத்துமே



அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை | Appanu koopida than


அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா

அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்

கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்


உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் | Ummai Padamal Yarai



உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே

துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்

ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே

ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்


நான் நிற்பதும் நிர்மூலமகாததும் | Nan Nirpathum Nirmulam agathathum



நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே - நான் உயிருடன்
வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே

காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம்
வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும்
தொலைதூரப் பயணத்திலும்
பாதம் கல்லிலே இடறாமல்
காப்பதும் கிருபையே

அக்கினி நடுவினிலே - என்னை
எரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்று
என்னைக் காப்பதும் கிருபையே - ஆழியின்
நடுவினிலும் சீறிடும் புயலினிலும்
நீர்மேல் நடந்து வந்து
என்னைக் காப்பதும் கிருபையே

கண்ணீர் கவலைகளில் கஷ்ட
நஷ்டங்களில் துஷ்டனின் கைக்கு
விலக்கி மீட்டதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்
மாபெரும் கிருபையே
எங்கள் தேவ கிருபையே




நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்| Naan Nadanthu Vantha Pathaigal Karadu Med



நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

நடக்க முடியல டாடி நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க - கரத்தில்
ஏந்திக்கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல 
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல 
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் வாழ முடியல

தனிமையின் பாதையில் | Thanimaiyin paathaiyil



தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ


    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 2


சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே

உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே

பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்


தகப்பனே தந்தையே | Thagappane Thanthaye


தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே

கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே

எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்

ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்

படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்

அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே

ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே

நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்


ஆனந்த களிப்புள்ள உதடுகளால் | Anantha kalipulla uthadukalaal



ஆனந்த களிப்புள்ள உதடுகளால் 
போற்றிப் புகழ்கின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்


மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
என் உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்

தேவனே நீர் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன்
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன்
வல்லமை காண்கின்றேன்

நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா
வலக்கரம் தாங்குதையா

கைகளை நான் உயர்த்துவேன்
திருநாமம் சொல்லி சொல்லி-என்
படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவினிலும் தியானிக்கின்றேன்
இரவினிலும் துதிக்கின்றேன்
படுக்கையிலும் நினைக்கின்றேன்


பனி போல பெய்யும் பரிசுத்தரே|Pani Pola Peyyum

பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே

ஆவியே.. ஆவியே..
மழையாக பொழியும் ஆவியே

மென்மை (வெண்மை) யானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி
ஆனந்த தைலமே

யுத்தங்கள் செய்பவரே
யோர்தானைப் பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே

வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்|Thuthiyin devane thuthikku

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
துதிக்கணும் உம்மை துதிக்கணும்
உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
நிரப்புமே நிரப்புமே ஐயா

ஆலோசனைக் கர்த்தரே
அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

அநாதி தேவன் நீரே -ஆபத்து
நேரத்திலே அடைக்கலமானீரே
ஆதாரம் என்றென்றுமே

Friday, November 4, 2016

ஆதி திருவார்த்தை திவ்ய|Aadhi Thiru Vaarthai

ஆதி திருவார்த்தை திவ்ய
அற்புத பாலனாக பிறந்தார்
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரை யீடேற்றிட

    மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனு குமாரன் வேஷமாய்
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
    மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்

    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

ஆதாம் ஓதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்

அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்பரன் மெய்பரன் தற்பரனார்.

அன்பு இயேசுவின் அன்பு|Anbu Yesuvin Anbu

அன்பு இயேசுவின் அன்பு
என்றும் மாறாத தூய அன்பு
எனக்காய் ஜீவனை ஈந்த அன்பு
என்னை தேடியணைத்த உம் அன்பு

என்னையும் உந்தன் அன்பினால்
கிட்டி சேர்த்தீரே இயேசுவே
உந்தன் அன்புக்கு இணை ஏதும் இல்லையே
தாயினும் மேலாய் நேசிக்கும் தேவனே
என்னை பெயர் சொல்லி அழைத்த உம் அன்பிலே
என்றும் நான் நிலைத்திருப்பேன்

பரிசுத்தராய் பாரில் ஜீவித்தே
பலியானீரே என் பாவம் போக்கிட
நிலையில்லா இவ்வுலகில் நான் வாழ்ந்திட
உம் நிலையான அன்பென்றும் போதுமே
எனக்காய் ஜீவன் தந்த என் இயேசுவே
உமக்காய் என்றும் சேவை செய்வேன்

அதிகாலையில் பாலனை தேடி|Athikalaiyil paalanai thedi

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே

அதி மங்கல காரணனே|Athi mangala karanane

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் - நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே

பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே

நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே

நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி | Bethlehem Oororam

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..

எல்லையில்லா ஞானபரன் -வெல்ல
மலையோரம் புல்லணையிலே
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம்....நேரம்....

வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ -ஆன பழங்
கந்தை என்ன பாடோ...பாடோ...

அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி...மோடி...

ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு -அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு...கண்டு....


பெத்லகேம் யாத்திரை சென்றே|Bethlehem yathirai senre

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
அவர் பாதம் நாம் பணிவோம்

நமக்கொரு பாலகன் பிறந்தார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
இருக்கும் கிறிஸ்து மேலானவரே

மேலோக மாளிகையை - விட்டு
பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
பசுத்தொட்டில் அவர் படுத்தார்

மன்னுயிர் வாழ்வதற்கே
இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் -உன்
மனத்துயர் தீர்த்திடுவார்

பாவ சந்தோஷங்களோ
உன்னைபாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே - கண்டு
இரட்சிப்பை தேடி நீ வா

வான பிதாவிடமே - உன்னை
விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
நித்ய ஜோதியை பின்பற்றி வா

கிறிஸ்மஸ் நாளிதே| Christmas Nalithae

கிறிஸ்மஸ் நாளிதே
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே | Bethlehem nakshatra minute



பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ

மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை

தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
ஏரோதின் வன் கண்கள் தேடுதே - இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே

ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே

வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
முள்முடி சூடின இயேசுவை - மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்





தேவகுமாரா தேவகுமாரா | Devakumara devakumara



தேவகுமாரா தேவகுமாரா என்னை நெனச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நெனச்சிடுங்க -- 2
நீங்க நெனச்சா ஆசீர்வாதம்தான்
என்னை மறந்தா எங்கேபோவேன் நான் -2

உடைந்த பாத்திரம் நான் - அது
உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் - இது
யாருக்கு புரியும் - 2

உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் - அது
உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான் - இதை
உலகே அறியும் -2

உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே -2
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே -2


Thursday, November 3, 2016

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் | isravelin Thuthigalil Vaasam Seiyum



இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர்


இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே என் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்.


எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர்.

செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
எம்மை நடத்தி வந்தீர்

எதிரியின் படை எம்மை சூழும்போது
ஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்




நல்லவரே என் இயேசுவே | Nallavare en yesuve



நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேனையா

என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

உமக்கே துதி! உமக்கே கனம்! உமக்கே புகழ்!
என் இயேசுவே



நிறைவான ஆவியானவரே | Niraivaana Aaviyaanavarae

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே





உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல | Ummai Nampi VanthEn nan vetkappatala



உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்


வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

இதோ மனிதர்கள் மத்தியில் | Itho Manithargal



இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்

சிலுவை நாதர் இயேசுவின் | Siluvai Naadhar Yesuvin



சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம்
காயங்களையும் பார்க்கின்றன


என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்

அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

எல்லாவற்றிலும் நீர் மேலானவர் | Yellavatrilum Neer Mellanavar



எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே நீர் மாத்ரமே

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (2)

கண்டேனென் கண்குளிர | Kandean en kannkuzhira



கண்டேனென் கண்குளிர - கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்

பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை

தேவாதி தேவனை தேவ சேனை -ஓயாது
ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை

பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான்

மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனை

இயேசு நேசிக்கிறார் | Yesu naesikirar



இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கிறார் - பாவி
நான் என்றாலும் தள்ளிவிடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகிறார்

அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவிகொடுத்தீர் - ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே

மாசற்ற தம் உதிரம் என்னக்கா சிலுவையிலே
மனதார அளித்தவரை மனம் நோகச்செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே

உயரமும் உன்னதமுமான | Uyaramum Unnathamum Aana


உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்


        சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
        பரிசுத்தர் பரிசுத்தரே


ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்