பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ
மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை
தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
ஏரோதின் வன் கண்கள் தேடுதே - இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே
ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே
வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
முள்முடி சூடின இயேசுவை - மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்
No comments:
Post a Comment