Tuesday, November 8, 2016

நான் நிற்பதும் நிர்மூலமகாததும் | Nan Nirpathum Nirmulam agathathum



நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
தேவ கிருபையே - நான் உயிருடன்
வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே

காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம்
வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும்
தொலைதூரப் பயணத்திலும்
பாதம் கல்லிலே இடறாமல்
காப்பதும் கிருபையே

அக்கினி நடுவினிலே - என்னை
எரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்று
என்னைக் காப்பதும் கிருபையே - ஆழியின்
நடுவினிலும் சீறிடும் புயலினிலும்
நீர்மேல் நடந்து வந்து
என்னைக் காப்பதும் கிருபையே

கண்ணீர் கவலைகளில் கஷ்ட
நஷ்டங்களில் துஷ்டனின் கைக்கு
விலக்கி மீட்டதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்
மாபெரும் கிருபையே
எங்கள் தேவ கிருபையே




No comments:

Post a Comment