Thursday, November 3, 2016

கண்டேனென் கண்குளிர | Kandean en kannkuzhira



கண்டேனென் கண்குளிர - கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்

பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை

தேவாதி தேவனை தேவ சேனை -ஓயாது
ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை

பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான்

மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனை

No comments:

Post a Comment