உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே
துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்
ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே
ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்
No comments:
Post a Comment