Friday, November 4, 2016

பெத்லகேம் யாத்திரை சென்றே|Bethlehem yathirai senre

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
அவர் பாதம் நாம் பணிவோம்

நமக்கொரு பாலகன் பிறந்தார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
இருக்கும் கிறிஸ்து மேலானவரே

மேலோக மாளிகையை - விட்டு
பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
பசுத்தொட்டில் அவர் படுத்தார்

மன்னுயிர் வாழ்வதற்கே
இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் -உன்
மனத்துயர் தீர்த்திடுவார்

பாவ சந்தோஷங்களோ
உன்னைபாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே - கண்டு
இரட்சிப்பை தேடி நீ வா

வான பிதாவிடமே - உன்னை
விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
நித்ய ஜோதியை பின்பற்றி வா

No comments:

Post a Comment