Tuesday, November 8, 2016

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் | Anantha kalipulla uthadukalaal



ஆனந்த களிப்புள்ள உதடுகளால் 
போற்றிப் புகழ்கின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்


மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
என் உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்

தேவனே நீர் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன்
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன்
வல்லமை காண்கின்றேன்

நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா
வலக்கரம் தாங்குதையா

கைகளை நான் உயர்த்துவேன்
திருநாமம் சொல்லி சொல்லி-என்
படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவினிலும் தியானிக்கின்றேன்
இரவினிலும் துதிக்கின்றேன்
படுக்கையிலும் நினைக்கின்றேன்


No comments:

Post a Comment